2011-03-12 15:08:12

திருத்தந்தை, இத்தாலிய தேசிய நகரசபை கழக உறுப்பினர்கள் சந்திப்பு


மார்ச் 12,2011: இந்த நவீன உலகின் பதட்டங்கள் மற்றும் துன்பங்களுக்கு மத்தியில் மக்கள் நீதியையும் தோழமை உணர்வையும் தங்கள் வாழ்க்கைப் பாதையாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.
இத்தாலியின் தேசிய நகரசபை கழகத்தின் தலைவர்கள் அலுவலகர்கள் என 250 பேரை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, நகரசபை குழுக்கள் ஒன்றுகூடி ஒருவர் மற்றவருடன் பேசி விழாக்கள் கொண்டாடி வருங்காலத்திற்குத் திட்டமிடுவது பற்றிக் குறிப்பிட்டார்.
விசுவாசக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலிகளில் பங்கெடுத்து ஆலயங்களுக்கு அருகிலுள்ள வளாகங்களில் விழாக் கொண்டாடுகின்றனர் என்றும் இந்த ஒரு சூழலில் இத்தாலி, தேசிய ஐக்கியத்தின் 150ம் ஆண்டை இம்மாதத்தில் சிறப்பிக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
இரண்டு முக்கிய வழிகாட்டும் கூறுகளான உதவி செய்வதும் ஒருமைப்பாடும் திருச்சபையின் சமூகக் கோட்பாட்டுடன் ஒத்திணங்கிச் செல்கின்றன என்றுரைத்த அவர், திருச்சபை சலுகைகளைக் கேட்கவில்லை, மாறாக அது தனது பணியை முழுமையாய் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புக்களைக் கேட்கின்றது என்றார்.
சமய சுதந்திரம் அமைதியைான நல்லிணக்க வாழ்வுக்கு அடிப்படையான உரிமை என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், குடியேற்றதாரருக்கு குடியுரிமை வழங்குவது பற்றியும் பேசினார்.








All the contents on this site are copyrighted ©.