2011-03-11 16:35:17

திருப்பீட அதிகாரி : கல்வியும் சமய சுதந்திரமும் ஒன்றையொன்று வலுவடையச் செய்ய முடியும்


மார்ச் 11,2011. கல்வியும் சமய சுதந்திரமும் ஒன்றையொன்று வலுவடையச் செய்ய முடியும் என்பதால் இக்கல்வியின் வழியாக ஒவ்வொரு மாணவனின் இன்றியமையாத மாண்பு மதிப்படையச் செய்ய இயலும் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் நடைபெறும் 16வது மனித உரிமைகள் அவையில் சமயச் சுதந்திரம் குறித்து இவ்வியாழனன்று உரையாற்றிய ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு தெரிவித்தார்.கல்விக்கும் சமய சுதந்திரத்திற்கும் இடையே இருக்கும் நெருங்கிய தொடர்பு குறித்து விளக்கிய பேராயர் தொமாசி, எல்லா அடிப்படை உரிமைகளும் சமமாக மதிக்கப்படும் போது பாகுபாடுகளைத் தடுக்க முடியும் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.