2011-03-11 16:37:09

கென்யக் கத்தோலிக்கத் திருச்சபை அந்நாட்டின் புதிய அரசியலமைப்பு பற்றி விளக்கி வருகிறது


மார்ச் 11,2011. கென்யக் கத்தோலிக்கத் திருச்சபை இத்தவக்கால நடவடிக்கையாக அந்நாட்டின் புதிய அரசியலமைப்பு பற்றியத் தெளிவை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
கென்யக் கத்தோலிக்க நீதி மற்றும் அமைதி அவை நடத்தி வரும் இத்தவக்கால நடவடிக்கையில் மனித வியாபாரம் முதல் தலைமைத்துவம் வரை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் பற்றிப் பேசிய அந்த அவைத் தலைவர் பேராயர் சக்கேயுஸ் ஓகோத், புதிய அரசியலமைப்பு பற்றி அரசியல்வாதிகள் சொல்வதன்படி மக்கள் செல்லாமல் அதில் அடங்கியுள்ள உண்மையான சாராம்சங்களைத் திருச்சபை எடுத்துரைத்து வருகிறது என்றார். ஆப்ரிக்க நாடான கென்யாவில் இப்புதிய அரசியலமைப்பு 2012ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னரே அமலுக்கு வரும்.







All the contents on this site are copyrighted ©.