2011-03-10 15:43:19

திருத்தந்தை: குருக்கள் எப்பொழுதும் கிறிஸ்துவின் தூதர்களாக அவரோடு இருப்பதே அவர்களின் பணி


மார்ச் 10,2011. குருக்கள் பகுதி நேரப் பணியாளர்களாக இருக்க முடியாது, மாறாக, அவர்கள் தங்களது முழு மன, முழு இதயத்தோடு எப்பொழுதும் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உரோம் மறைமாவட்ட குருக்களிடம் கூறினார்.
இவ்வியாழனன்று வத்திக்கானில் உரோம் மறைமாவட்ட குருக்களைச் சந்தித்துப் பேசிய திருத்தந்தை, குருக்கள் எப்பொழுதும் கிறிஸ்துவின் தூதர்களாக அவரோடு இருப்பதே அவர்களின் பணி, இது அவர்களின் முழு வாழ்க்கையையும் ஊடுருவிச் செல்வதாக இருக்க வேண்டும் என்றார்.
இன்றைய உலகம் கடவுளை அறிந்து கொள்வதற்கு மிகவும் ஆவல் கொண்டுள்ளவேளை, குருக்கள் கடவுளைப் பற்றியத் தேடலில் விழித்தெழுந்தவர்களாக வாழுமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
அலகையின் எதிர்ப்புச் சக்தி முன்வைக்கும் ஆபத்தால் திருச்சபை எப்பொழுதும் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்றுரைத்த திருத்தந்தை , உண்மை பொய்யைவிடவும், அன்பு வெறுப்பை விடவும், வல்லமை வாய்ந்தவை என்றும் கடவுள் அனைத்துவிதமான எதிர்ப்புச் சக்திகளை விடவும் மிகுந்த வல்லமை வாய்ந்தவர் என்றும் கூறினார். இந்த ஓர் உண்மையுடன், கடவுளின் ஆறுதல் மற்றும் உலகின் அடக்குமுறைகளில் குருக்கள் தங்களது பாதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு அறிந்திருக்க வேண்டுமெனவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பரிந்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.