2011-03-10 15:44:29

காரித்தாஸ் ஆசியாவின் புதிய தலைவராக ஜப்பான் ஆயர் Isao Kikuchi


மார்ச் 10,2011. காரித்தாஸ் ஆசியாவின் தலைவராக ஜப்பானின் Niigata ஆயர் Isao Kikuchi இப்புதனன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். 52 வயதான ஜப்பானிய ஆயர் Isao காரித்தாஸ் ஆசியாவின் தற்போதயைத் தலைவரான தூத்துக்குடி ஆயர் Yvon Ambroseக்கு அடுத்தபடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வருகிற மே மாதம் உரோம் நகரில் நடைபெறும் அகில உலகக் காரித்தாஸ் அமைப்பின் பேரவையில் இந்தத் தேர்வு உறுதியாக்கப்படும் என்று UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.
தற்போது காரித்தாஸ் ஆசியாவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜப்பான் ஆயர் Isao கடந்த 15 ஆண்டுகள் காரித்தாஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்றும், ஆப்ரிக்கா உட்பட பல நாடுகளின் காரித்தாஸ் சேவைகளில் ஈடுபட்டவர் என்றும் காரித்தாஸ் ஆசியா சேவைகளை ஒருங்கிணைக்கும் அருள்தந்தை Bonnie Mendes கூறினார்.19 நாடுகளிலிருந்து வந்திருந்த 31 உறுப்பினர்களின் பாங்காக் கூட்டத்தில் மங்கோலியா, வியட்நாம் ஆகிய நாடுகளின் காரித்தாஸ் அமைப்புக்களும் காரித்தாஸ் ஆசியாவின் முழு உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.







All the contents on this site are copyrighted ©.