2011-03-09 15:30:04

அகில உலக மகளிர் தினத்தன்று கந்தமால் பகுதியில் 4000 கிறிஸ்தவ மற்றும் இந்து பெண்கள் ஊர்வலம்


மார்ச் 09,2011. இதற்கிடையே, அகில உலக மகளிர் தின செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் இச்செவ்வாயன்று ஏறத்தாழ 4000 கிறிஸ்தவ மற்றும் இந்து பெண்கள் ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் 75 விழுக்காட்டினர் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டு கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்குப் பிறகு கிறிஸ்தவர்களும் இந்துக்களும் இணைந்து மேற்கொள்ளும் முதல் ஒற்றுமை முயற்சி இது என்றும், இதைப் பெண்கள் முன்னின்று நடத்தினர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.எந்த ஒரு சமுதாயத்திலும் பெண்கள் ஒப்புரவையும், சகிப்புத் தன்மையையும் வளர்க்கும் கருவிகளாய் இருக்கின்றனர் என்பதற்கு இந்த ஊர்வலமும் ஒரு சான்று என்று இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான அருள் சகோதரி Justine Senapati கூறினார்.







All the contents on this site are copyrighted ©.