2011-03-08 16:18:41

பெண்களுக்கு வசதிகள் வழங்கப்பட்டால் அதிகமான மக்களின் பசியைப் போக்க முடியும் – ஐ.நா


மார்ச்08,2011. இன்னும், உணவு உற்பத்திக்கு அவசியமான நிலம், பணம், கல்வி, தொழிற்நுட்பம் உட்பட அனைத்து வசதிகளும் பெண்களுக்கு வழங்கப்பட்டால் உலகில் பசியாய் இருக்கும் மக்களில் 15 கோடிக்கு மேற்பட்டோருக்கு அவர்கள் உணவளிக்க முடியும் என்று ஐ.நா.அறிக்கை கூறுகிறது.
கிராமப்புறப் பெண்கள் உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்குத் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றுரைக்கும் FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், ஆண்களுக்குச் சமமாகப் பெண்களுக்கு முதலீடுகள் இல்லாததால் அவர்களின் உற்பத்தியும் குறைவாக இருக்கின்றது என்று கூறியது.
ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் வேளாண் உற்பத்தித் தொடர்பான வசதிகள் வழங்கப்பட்டால் வளரும் நாடுகளில் 20 முதல் 30 விழுக்காட்டு உணவு உற்பத்தியைப் பெருக்க முடியும் என்றும் FAO நிறுவன அறிக்கை கூறுகிறது.
2010ம் ஆண்டில் சுமார் 92 கோடியே 25 இலட்சம் பேர் ஊட்டச்சத்துக் குறைவானவர்கள். இவர்களில் பெரும்பான்மையினோர் வளரும் நாடுகளில் உள்ளனர்







All the contents on this site are copyrighted ©.