2011-03-08 16:17:00

இந்தோர் மறைமாவட்டம் மகளிர் தினத்தன்று தையல் எந்திரங்களை வழங்கியது


மார்ச்08,2011. பெண்கள், ஆண்கள் போன்று சமமாகச் சம்பாதிக்கத் தொடங்கும் போது மட்டுமே இந்திய சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் அட்டூழியங்களும் முடிவுக்கு வரும் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
மத்திய இந்தியாவின் இந்தோர் மறைமாவட்டம் இச்செவ்வாய்க்கிழமை அனைத்துலக மகளிர் தினத்தைக் கடைபிடித்த விழாவில் சேரிப் பெண்களுக்கு 25 தையல் எந்திரங்களை வழங்கி உரையாற்றிய இந்தோர் மறைமாவட்ட ஆயர் Chacko Thottumarickal இவ்வாறு கூறினார்.
இந்த அனைத்துலக மகளிர் தின விழாவில் முப்பது சேரிகளிலிருந்து சுமார் நான்காயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய இந்தோர் மறைமாவட்ட சமூகப்பணி மைய இயக்குனர் அருட்திரு சைமன் ராஜ், இந்தத் தையல் எந்திரங்கள் நிரந்தர வருமானத்தை மட்டுமல்லாமல், ஒரு தொழிலைச் செய்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தும் என்றார்.







All the contents on this site are copyrighted ©.