2011-03-07 14:52:22

மார்ச் 08 வாழ்ந்தவர் வழியில் .....


இலங்கை சுன்னாகம் அ.குமார சுவாமிப் புலவர், காலனித்துவ ஆட்சிக் காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களில் ஒருவர். தமிழில் பண்டிதரான இவர், சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். இவர் சிறுவயதிலிருந்தே தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். சாணக்கிய நீதி வெண்பா, மேகதூதக் காரிகை, இராமோதந்தம் போன்ற நூல்களை வட மொழியிலிருந்து மொழி பெயர்த்தார். சில இலக்கிய நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார். தமிழ்ப்புலவர் சரித்திரம் என்பது இவர் எழுதிய ஒரு வரலாற்று நூல். இன்னும், இவர் இலக்கியச் சொல் அகராதி, நீதிநெறி விளக்கம் போன்றவற்றையும், சில கவிதை நூல்களையும் உரைநடை நூல்களையும் இயற்றினார். புலவர் அ. குமார சுவாமி, 1854ம் ஆண்டு சனவரி 18ம் தேதி பிறந்து 1922ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி இறைவனடி எய்தினார். இவரது சிலை சுன்னாகம் நூலக வளாகத்தில் அமைந்துள்ளது
உயர்ந்தோர் சொல்கிறார்கள்: “மகத்தானவர்கள் காணும் மகத்தான கனவுகள் எப்போதுமே நனவாகின்றன” என்று.







All the contents on this site are copyrighted ©.