2011-03-04 16:32:43

காருண்யக் கொலைக்கானப் பரிந்துரையை இந்திய அரசு நிராகரித்துள்ளது


மார்ச் 04,2011. தீராத நோயாளிகள் தங்கள் துன்பங்களிலிருந்து விடுதலை பெறும் நோக்கத்தில் இறப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற மத்திய குழுவின் பரிந்துரையை இந்திய அரசு நிராகரித்துள்ளது.
37 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் அருணா ஷான்பாக் என்பவரின் சார்பில் முன்வைக்கப்பட்ட காருண்யக் கொலைக்கானப் பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் வாழ்வதை அல்லது இறப்பதைத் தீர்மானிப்பவர் யார்? இத்தகைய தீராத நோய்க்கு நாளையே மருந்து கண்டுபிடிக்கப்படலாம்? யார் அறிவார்? என்று இவ்வழக்கை விசாரித்த அலுவலகர் விவாதித்தார் என்று கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.