2011-03-02 15:34:06

லிபியாவிலிருந்து வெளியேற விரும்பும் எரித்ரிய நாட்டவர்களுக்கு உதவும்படி திருப்பீடத் தூதர் வேண்டுகோள்


மார்ச் 02,2011. உள்நாட்டுப் போரையொத்த ஒரு சூழ்நிலை உருவாகியுள்ள இந்நேரத்தில் லிபியாவிலிருந்து வெளியேற விரும்பும் எரித்ரிய நாட்டவர்களுக்கு உதவும்படி லிபியாவுக்கான திருப்பீடத் தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tripoliயில் உள்ள திருப்பீடத் தூதரான பேராயர் Tommaso Caputo FIDES செய்தி நிறுவனத்திற்கு இத்திங்களன்று அனுப்பியுள்ள ஒரு விண்ணப்பத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
எரித்ரிய நாட்டைச் சார்ந்த ஏறத்தாழ 2000 பேர் தற்போது அங்குள்ள கோவில்களில் தங்கியுள்ளனர் என்றும் அவர்களுக்கு உதவிகள் செய்யமுடியாமல் தலத் திருச்சபை பல நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளதென்றும் பேராயர் Caputo கூறினார்.
தற்போது Tripoliயில் ஓரளவு அமைதி நிலவுகிறது என்றாலும், இது எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியாது என்றும், எரித்ரிய மக்களில் பெரும்பாலும் அவதிப்படுவது குழந்தைகளும், பெண்களுமே என்றும் பேராயர் எடுத்துரைத்தார்.லிபியாவில் நடைபெற்றுவரும் போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர் மற்றும் பிற மதத்தினர் அனைவருக்கும் தலத்திருச்சபை சார்பில் பல்வேறு துறவறக் குழுக்களும், தனிப்பட்ட மனிதர்களும் உதவி வருகின்றனர் என்று FIDES செய்தி கூறுகின்றது.







All the contents on this site are copyrighted ©.