2011-03-02 15:34:33

இந்தியாவின் மத்திய நிதிநிலை அறிக்கை மகிழ்ச்சி தருகிறது - இந்திய ஆயர்கள் பேரவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர்


மார்ச் 02,2011. இச்செவ்வாயன்று இந்திய பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையைக் குறித்து தன் மகிழ்வைத் தெரிவித்துள்ளார் இந்திய ஆயர்கள் பேரவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப்.
இந்தியா இன்று சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள் மத்தியில், விவசாயிகள், வரிசெலுத்துவோர், மற்றும் வயது முதிர்ந்தோர் என்று அனைத்துத் தரப்பினரையும் மனதில் கொண்டு இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென்று அருள்தந்தை பாபு ஜோசப் கூறினார்.
2011-2012க்கான நிதியறிக்கை எவ்வகையிலும் வரலாறு படைக்கவில்லையெனினும், வலுவிழந்த சமுதாயத்தை மனதில் கொண்டு வரையப்பட்டுள்ள இவ்வறிக்கை திருப்தியைத் தருகிறதென்று அருள்தந்தை கூறினார்.நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்த இந்த நிதி அறிக்கையை எதிர்கட்சியான பாரதீய ஜனதாவும், இடது சாரி கட்சிகளும் கண்டனம் செய்துள்ளன.







All the contents on this site are copyrighted ©.