2011-03-02 15:34:21

அமைச்சர் Shahbaz Bhatti கொலை செய்யப்பட்டதையொட்டி பாகிஸ்தான், இந்தியக் கிறிஸ்தவர்கள் கண்டனம்


மார்ச் 02,2011. மேலும், கத்தோலிக்க அமைச்சர் Shahbaz Bhatti சுட்டு கொல்லப்பட்டது குறித்து பாகிஸ்தான் பிரதமர் Syed Yousuf Raza Gilani, இந்தியக் கிறிஸ்தவர்கள் உட்பட அந்நாட்டுக் கத்தோலிக்க மற்று்ம் பிற கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தை முன்னிட்டு இப்புதன் மாலை லாகூர் பேராயர் இல்லத்திற்கு அருகிலுள்ள இயேசுவின் திரு இதயப் பேராலயத்தில் கத்தோலிக்க மற்று்ம் பிற கிறிஸ்தவ சபைத் தலைவர்களின் கூட்டத்திற்கு செய்த லாகூர் குருகுல முதல்வர் அருட்திரு ஆண்ட்ரு நிசாரி (Andrew Nisari), இவ்வன்முறையை வன்மையாயக் கண்டித்தார்.
இந்த நாட்டில் மாற்றுக் கருத்தை யாரும் கொண்டிருக்க முடியாது என்பதை இந்த வன்செயல் காட்டுகின்றது என்றுரைத்த குரு நிசாரி, பாகிஸ்தானில் இம்மாதிரியானப் போக்குத் தொடர்ந்தால் அது தோல்வியடைந்த நாடாக மட்டுமல்லாமல், அனைத்துலக சமுதாயத்தால் தனிமைப்படுத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
இன்னும், இந்தக் கொலைச் சம்பவம் சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாமல், மனித சமுதாயத்துக்கே வேதனையையும் கவலையையும் தருகின்றது என்றுரைத்த இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி ஆயர் ரூஃபின் அந்தோணி, இது சிறுபான்மையினருக்கும் அரசுக்கும் உண்மை நிலையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
லாகூரில் பொதுநிலைக் கிறிஸ்தவர்களும் போராட்டங்கள் மற்றும் கண்டனக் கூட்டங்கள் நடத்துவதற்குத் தயாரித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் கிறிஸ்தவருடன் தங்களது தோழமை உணர்வைத் தெரிவித்த இந்தியக் கிறிஸ்தவர்கள், தேவநிந்தனைச் சட்டம் திரும்பப் பெறுமாறும் கேட்டுள்ளனர்.
2008ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி சிறுபான்மைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் கத்தோலிக்கரான Shabbaz Bhatti, சமய சுதந்திரம், அமைதி, மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான அவரின் முயற்சிகளுக்கு எண்ணற்ற சர்வதேச விருதுகளைப் பெற்றிருப்பவர். தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர்.








All the contents on this site are copyrighted ©.