2011-03-01 16:03:53

வத்திக்கான் நாட்டுக் குடியுரிமை, வத்திக்கான் நாட்டுக்குள் தங்கும் அனுமதி குறித்த புதிய சட்டம்


மார்ச்01,2011. வத்திக்கான் நாட்டுக் குடியுரிமை, வத்திக்கான் நாட்டுக்குள் தங்கும் அனுமதி மற்றும் நுழைவு அனுமதிகள் குறித்த புதிய சட்டம் இச்செவ்வாய் முதல் அமலுக்கு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூய பேதுருவின் தலைமைப்பீட விழாவாகிய இந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கையெழுத்திட்ட இப்புதிய சட்டம் மார்ச் ஒன்றாந்தேதி இச்செவ்வாய் முதல் அமலுக்கு வருகின்றது.
இதற்கு முந்தைய சட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது, ஆனால் தற்போதைய இந்தப் புதிய சட்டம் நான்கு அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் 5 அதிகாரங்கள் வத்திக்கான் நாட்டுக் குடியுரிமை குறித்தும் அடுத்த மூன்று அதிகாரங்கள் வத்திக்கான் நாட்டுக்குள் தங்கும் அனுமதி குறித்தும், அடுத்த 8 அதிகாரங்கள் முன்அனுமதியுடன் வத்திக்கான் நாட்டுக்குள் நுழைவது குறித்தும் விவரிக்கின்றன.
44 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட வத்திக்கான் நகர நாட்டில் தற்போது 444 பேர் வாழ்கின்றனர்.
மேலும், 2010ம் ஆண்டில் திருத்தந்தை நடத்திய திருவழிபாடுகள் மற்றும் பொது சந்திப்புக்களில் சுமார் 22,70,000 பேர் கலந்து கொண்டனர். வத்திக்கான் அருங்காட்சியகத்தை சுமார் 46,00,000 பேரும் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவை 41,00,000 பேரும் பார்வையிட்டனர் என்று வத்திக்கான் காவல்துறை கூறியது







All the contents on this site are copyrighted ©.