2011-03-01 15:39:41

மார்ச் 02, வாழந்தவர் வழியில்...


1807ம் ஆண்டு மார்ச் 2ம் நாள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாராளு மன்றத்தில் புதியதொரு சட்டம் விவாதத்திற்காக வைக்கப்பட்டது. நாட்டிற்குள் அடிமைகளாக இனி யாரையும் கொண்டு வரக்கூடாது என்ற அச்சட்டம் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. அடுத்த நாள் மார்ச் 3ம் தேதியன்று அமெரிக்க அரசுத் தலைவர் Thomas Jeffersonஆல் கையெழுத்திடப்பட்டு சட்டமானது.
1619ல் அமெரிக்காவில் ஆரம்பமான அடிமைகள் வியாபாரம் 1776 முதல் படிப்படியாக நிறுத்தப்பட்டு, 1807ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது. அடிமைகள் வியாபாரம் நிறுத்தப்பட்டாலும், அடிமைகளாய் இருந்தவர்கள் விடுவிக்கப்படவில்லை. 13வது சட்டச் சீர்திருத்தத்தின் வழியாக, 1865ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிமைத்தனம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒழிக்கப்பட்டது.
இதே மார்ச் 2ம் நாள் 1861ம் ஆண்டு இரஷ்யாவில் விவசாயக் கூலிகள் அனைவருக்கும் விடுதலையும் குடியுரிமையும் வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது.அடிமைத்தனம் இன்னும் உலகில் பல வடிவங்களில் உள்ளது. அதை அழிக்கும் முயற்சிகளும் மனித வரலாற்றில் தொடர்ந்த வண்ணம் உள்ளன.







All the contents on this site are copyrighted ©.