2011-03-01 16:10:09

2012ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குக் கிறிஸ்தவ சபைகள் தயாரிப்பு


மார்ச்01,2011. பிரிட்டனில் 2012ம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கு உதவுவதற்கானத் தயாரிப்புக்களைத் தொடங்கியுள்ளது அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகள்.
பிரிட்டனில் ஒலிம்பிக் விளையாட்டுகள் சமயத்தில் ஆலயங்களுக்கு உதவுவதற்கென அந்நாட்டின் முக்கிய கிறிஸ்தவ சபைகள் இணைந்து “More Than Gold” என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளன.
இந்த ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கானக் கத்தோலிக்கத் திருச்சபையின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் பார்க்கர் பேசுகையில், 2012ம் ஆண்டு விளையாட்டுக்களின் போது ஆலயங்களுக்கு வரும் மக்களை எவ்வாறு வரவேற்க வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் போன்ற வழிமுறைகள் கற்றுக் கொடுக்கப்படும் என்றார்







All the contents on this site are copyrighted ©.