2011-02-26 16:00:29

மெக்சிகோவில் ஊழல் ஒழிக்கப்பட ஆயர் அழைப்பு


பிப்.26,2011. மெக்சிகோவில் அருட்பணியாளர் Santos Sánchez Hernández கொல்லப்பட்டிருப்பதற்குத் திருட்டுக் காரணமாகச் சொல்லப்பட்டாலும், அந்நாட்டில் ஊழலும் ஒழுக்கமின்மையும் மிகுந்திருப்பதையே இத்தகைய கொலைகள் பிரதிபலிக்கின்றன என்று மெக்சிகோ ஆயர் ஒருவர் அரசைக் குறை கூறினார்.
54 வயதாகும் அருட்பணியாளர் Sánchez, Mecapalapa பங்கில் இத்திங்கள் இரவு கொலை செய்யப்பட்டது குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆயர் ஹூவான் நவாரோ, மெக்சிகோவில் வன்முறையும் பாதுகாப்பற்ற சூழலும் நிலவுவதாகத் தெரிவித்தார்.
ஒழுக்க மற்றும் சமூக ஒழுங்கு முறைகளைக் காக்க வேண்டிய நிறுவனங்களில் காணப்படும் ஊழல்,இக்குருவின் கொலையில் பிரதிபலிக்கின்றது என்றும் ஆயர் நவாரோ கூறினார்







All the contents on this site are copyrighted ©.