2011-02-26 15:36:06

பிப்ரவரி 27, வாழந்தவர் வழியில்...


முதலாம் கான்ஸ்டன்டைன், மாவீரன் கான்ஸ்டன்டைன், புனித கான்ஸ்டன்டைன் என்று பல அடைமொழிகளால் அழைக்கப்படும் Flavius Valerius Aurelius Constantinus 272ம் ஆண்டு பிப்ரவரி 27ம் நாள் பிறந்தவர்.
இவரது தாய் புனித ஹெலெனா. தாயின் உந்துதலால், கிறிஸ்தவ மறையைத் தழுவிய முதல் உரோமையப் பேரரசரான கான்ஸ்டன்டைன், 306ம் ஆண்டு முதல் 337ம் ஆண்டு வரை அரசாண்டார்.
இவருக்கு முன்னர் உரோமையப் பேரரசனாக இருந்த Diocletian கிறிஸ்தவர்களைச் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கி, கொலை செய்வதற்குப் பிறப்பித்திருந்த ஆணைகளை கான்ஸ்டன்டைன் இரத்து செய்தார். தன் பேரரசெங்கும் அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்ளும் சகிப்புத் தன்மை நிறைந்தச் சூழலை உருவாக்கினார்.இவர் உருவாக்கிய Constantinople என்ற நகரம், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உரோமையப் பேரரசின் தலைநகராக விளங்கியது. கான்ஸ்டன்டைனின் மனமாற்றம் கிறிஸ்தவத்தை உலகின் முன்னணி மறையாக மாற்ற பெரிதும் உதவியாக இருந்தது.







All the contents on this site are copyrighted ©.