2011-02-25 15:56:47

உலகெங்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சார்பாகக் குரல் கொடுப்பதற்கென ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் புதிய அமைப்பு


பிப்.24,2011. உலகெங்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சார்பாகக் குரல் கொடுப்பதற்கென ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் UN Women என்ற புதிய பெண்கள் அமைப்பு உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் நிகழ்வில் உலகளாவிய அரசியல், வணிகம், பத்திரிகை, இசை, திரைப்படம் எனப் பல துறையினர் கலந்து கொண்டனர்.
2010ம் ஆண்டு ஜூலையில் ஐ.நா.பொது அவையால் உருவாக்கப்பட்ட இப்புதிய அமைப்பில் UNIFEM என்ற பெண்களுக்கான ஐ.நா. வளர்ச்சித் திட்ட நிதி, DAW என்ற பெண்கள் முன்னேற்றப் பிரிவு, பாலின விவகாரம் குறித்த சிறப்பு ஆசலோசகர் அலுவலகம், UN-INSTRAW என்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான சர்வதேச ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை உள்ளடங்கும்.
இப்புதிய அமைப்பு ஆண்டுக்குக் குறைந்தது 50 கோடி டாலர் செலவில் செயல்படும்.







All the contents on this site are copyrighted ©.