2011-02-23 16:50:41

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் வன்முறை அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு லிபிய அரசுக்கு ஐ.நா.பாதுகாப்பு அவை அழைப்பு


பிப்.23,2011. லிபியாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் வன்முறை அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறும் அப்பாவி பொது மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசு ஏற்குமாறும் அந்நாட்டு அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது ஐ.நா.பாதுகாப்பு அவை.
அமைதியாகப் போராடும் அப்பாவி மக்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை ஐ.நா.பாதுகாப்பு அவை உறுப்பினர்கள் வன்மையாய்க் கண்டிப்பதாகக் கூறிய பிரேசில் தூதர் மரிய லூயிசா ரிபெய்ரோ வியோட்டி, லிபியாவில் நடக்கும் போராட்டங்களில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் இறந்துள்ளது குறித்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் உரையாடலைத் தொடர்வது உட்பட குடிமக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் லிபிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் லூயிசா ரிபெய்ரோ.







All the contents on this site are copyrighted ©.