2011-02-18 15:27:45

திருத்தந்தையால் ஆசீர்வதிக்கப்பட்ட பெண்குழந்தை விபத்திலிருந்து காப்பற்றப்பட்ட அற்புதம்


பிப்.18,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டின் ஆஸ்திரேலிய பயணத்தின்போது அவரால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு பெண்குழந்தை இச்செவ்வாயன்று ஒரு விபத்திலிருந்து அற்புதமான வகையில் காப்பற்றப்பட்டுள்ளார் என்று இவ்வெள்ளியன்று வெளியான ஆஸ்திரேலிய செய்தித்தாள் கூறுகிறது.
2008ம் ஆண்டு திருத்தந்தை ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் உலக இளையோர் நாளைக் கொண்டாச் சென்றிருந்தபோது ஒரு சில மாதங்களே ஆன Claire Hill என்ற குழந்தையைக் கையிலேந்தி ஆசீர்வதித்தார்.
தற்போது மூன்று வயதாகும் Claireன் தந்தை Mini Bus ஓட்டுனர். அவர் இச்செவ்வாய் பிற்பகலில் தன் சிற்றுந்தை பின்புறமாய் எடுக்கும் வேளையில் அவரது மகள் Claire வாகனத்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார். சிற்றுந்து சிறுமியின் வயிற்றுப் பகுதியில் முற்றிலும் ஏறி இறங்கியது.
நடந்ததை உணர்ந்த Peter வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடி வந்தார். தன் மகளைத் தானே கொன்றுவிட்டோம் என்று எண்ணினார். ஆனால், சிறுமி Claire எந்த வித ஆபத்தும் இல்லாமல் காப்பற்றப்பட்டதை அறிந்தார்.
வாகனத்தின் சக்கரங்கள் சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பதிந்துள்ளதை நன்கு காண முடிந்தது என்றாலும், எலும்புகள், உள் உறுப்புக்கள் எதுவும் சேதமடையாமல் ஒரு சில வெளிப்புறக் காயங்களோடு சிறுமி Claire காப்பாற்றப்பட்டது ஒரு புதுமையே என்று கூறப்படுகிறது.Claireன் தாய் Sue Hill விபத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர்தான் சிறுமிக்கு மரியன்னையின் பதக்கம் ஒன்றை தான் அணிவித்ததாகவும், தங்கள் குழந்தை செபத்தினாலேயே காப்பாற்றப்பட்டாள் என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.