2011-02-18 15:25:27

எகிப்தைக் கட்டியெழுப்பும் பணியில் கத்தோலிக்கர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் - கர்தினால் Leonardo Sandri


பிப்.18,2011. ஆப்ரிக்க நாடுகளுக்கு மத்தியில் ஒரு தலைசிறந்த நாடாக இருக்க எகிப்து அழைக்கப்பட்டுள்ளதென்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
சென்ற வாரம் வெள்ளியன்று எகிப்து அரசுத் தலைவர் ஹோஸ்னி முபாரக் தன் பதவியைத் துறந்ததையொட்டி, கீழைரீதி சபைகளுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri, வத்திக்கான் வானொலிக்கு அண்மையில் பேட்டியளித்தபோது இவ்விதம் கூறினார்.
தற்போது எகிப்தின் அரசைக் கட்டுப்படுத்தும் இராணுவ அதிகாரிகள் அங்குள்ள அனைத்து மக்களின், முக்கியமாக, அங்குள்ள கிறிஸ்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்ற தன் நம்பிக்கையை கர்தினால் Sandri தெரிவித்தார்.எகிப்தில் வாழும் 200000க்கும் மேற்பட்ட காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களுக்கு அண்மைய புரட்சி நாட்கள் அருளும் வாய்ப்புக்களும் நிறைந்த நாட்கள் என்று கூறிய கர்தினால் Sandri, இனி வரும் நாட்களில் எகிப்தைக் கட்டியெழுப்பும் பணியில் கத்தோலிக்கர்கள் தங்கள் பங்களிப்பை அதிகம் வழங்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.