2011-02-18 15:26:49

இயற்கை சார்ந்த சாகுபடி முறைகள் - அமராவதி மறைமாவட்டத்தின் முயற்சிகள்


பிப்.18,2011. இந்தியாவின் அமராவதி மறைமாவட்டத்தின் முயற்சிகளால் பல விவசாயிகளின் வாழ்வில் நம்பிக்கை பிறந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி பகுதியில் இந்திய காரித்தாஸ் அமைப்பின் நிதி உதவியுடன் Organic farming என்று வழங்கப்படும் இயற்கை சார்ந்த சாகுபடி முறைகளை அம்மறைமாவட்டம் விவசாயிகளுக்குச் சொல்லித் தருகிறது.
இச்சாகுபடி முறையால் தங்கள் விளைச்சல் இருமடங்கு பெருகியுள்ளதென்று கங்காராம் ஜமார்கர் என்ற விவசாயி UCAN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
தொடர்ந்து சில ஆண்டுகள் சாகுபடி பொய்த்ததால், விவசாயிகளின் குடும்பங்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டதையொட்டி அமராவதி மறைமாவட்டம் இம்முயற்சியை மேற்கொண்டது என்றும், இம்முயற்சியால் பல விவசாயிகளின் குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்றும் இம்முயற்சியின் ஒருங்கிணைப்பாளர் முகுந்த் தேஷ்முக் கூறினார்.ஒவ்வொரு விவசாயியும் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியில் சோதனைக்காக இம்முயற்சிகளை ஆரம்பித்தனர் என்றும், இம்முறையால் அவர்கள் பெற்ற பயனைக் கண்டு தங்கள் நிலம் முழுவதிலும் இவ்வியற்கை சார்ந்த சாகுபடிகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றுள்ளனர் என்றும் அமராவதி மறைமாவட்ட சமூகப் பணிக் குழுவின் தலைவர் அருள்தந்தை ஜாலி புத்தென்புரா கூறினார்.







All the contents on this site are copyrighted ©.