2011-02-17 15:15:50

பிப்ரவரி 18 - வாழ்ந்தவர் வழியில்.....


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886)
ஒரு சமயம் அந்த வீட்டுக் கணவன், தனது மனைவியிடம், ‘நான் துறவியாகிறேன். தவம் செய்யக் கானகம் செல்கிறேன்!’ என்றான். சரி. நீங்கள் துறவி என்றால் நானும் இனித் துறவிதான். எனவே நானும் உங்களுடன் வருகிறேன். என்றாள் மனைவி. இருவரும் கானகம் நோக்கி நடந்தனர். வழியில் மண்ணில் ஒரு வைரக்கல் பளபளத்தது. அதைப் பார்த்த கணவன், இதைப் பார்த்தால் தனது பின்னால் நடந்துவரும் மனைவி அதற்கு ஆசைப்படுவாள், அவ்விதம் ஆசைப்படுவது துறவு நெறிக்குப் பழுது. எனவே வைரக்கல்லை மண்ணால் மூடி மறைத்துவிடுவோம் என்று போகிற போக்கில் காலாலேயே வைரக்கல்லை மண்ணால் மூடிவிட்டு தொடர்ந்து நடந்தான். மனைவி வைரக்கல்லையும் பார்த்தாள். கணவன் செய்த செயலையும் பார்த்தாள். அவன் மனத்தையும் உள்ளுணர்வால் படித்துவிட்டாள். அப்போது அந்த மனைவி தனது கணவனிடம், ‘அன்பரே! வைரக்கல்லுக்கும் மண்ணாங்கட்டிக்கும் வித்தியாசம் தெரிகிறபோது, உமக்கு எதற்குத் துறவு? பேசாமல் வீட்டுக்குத் திரும்புங்கள்!’ என்றாளாம்.
துறவி என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாகச் சுட்டும் இந்த நிகழ்வைச் சொன்னவர் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர். கோதாதர் சாட்டர்ஜி என்ற இயற்பெயரைக் கொண்ட ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 19ம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். சுவாமி விவேகானந்தரின் குரு. இவர் மேற்கு வங்காளத்தின் கமார்புகூர் எனும் கிராமத்தில் 1836ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பிறந்தார்.







All the contents on this site are copyrighted ©.