2011-02-17 15:25:21

தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு சட்டங்கள் விவாதிக்கப்பட வேண்டும் - வத்திக்கான் அதிகாரி


பிப்.17,2011. குழந்தைகளைத் தத்தெடுக்கும் சட்டங்கள் குறித்த விவாதங்கள் தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு விவாதிக்கப்பட வேண்டுமென வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
திருமணம் செய்து வாழும் ஆணும் பெண்ணும் மட்டுமே குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை இத்தாலியில் தற்போது சட்டமாக உள்ளது. இச்சட்டத்தை மாற்றி, தனித்து வாழும் ஆண், பெண் ஆகியோருக்கும் தத்தெடுக்கும் உரிமையை சட்டமாக்க வேண்டும் என்று இத்தாலியின் உச்ச நீதி மன்றம் அரசை அண்மையில் கேட்டுக் கொண்டுள்ளது.உச்ச நீதி மன்றத்தின் இம்முயற்சி குறித்து, குடும்பங்களுக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Ennio Antonelli தன் கருத்தைக் கூறும்போது, ஒவ்வொரு குழந்தைக்கும் தாய், தந்தை இருவரும் தேவை என்பதால், அவர்கள் இணைந்து வாழும் குடும்பங்களில் தத்தெடுக்கப்படும் குழந்தை வளர்வதே நல்லது. தத்தெடுக்கும் சட்டங்கள் குறித்த விவாதத்தில் இக்கருத்து மனதில் கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.