2011-02-16 16:07:59

நாடோடி இனத்தவர் குறித்து திருத்தந்தை விடுத்த அழைப்பிற்கு இந்துமதத் தலைவர்களின் பாராட்டு


பிப்.16,2011. உரோமையில் வாழும் நாடோடி இனத்தவர் இன்னும் அதிகமாய் சமுதாயத்தின் ஓர் அங்கமாக்கப்பட வேண்டும் என்று திருத்தந்தை விடுத்த அழைப்பிற்கு இந்துமதத் தலைவர்கள் தங்கள் பாராட்டையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய மூவேளை செப உரையில் உரோமை நகரில் அண்மையில் தீவிபத்தில் இறந்த குழந்தைகளை நினைவு கூர்ந்தபோது, நாடோடி மக்களின் வாழ்வை முன்னேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்தார்.
அகில உலக இந்துக்கள் கழகத்தின் தலைவரான Rajan Zed என்ற அமெரிக்க அரசு அதிகாரி, திருத்தந்தையின் இவ்வழைப்பைக் குறித்து தன் கருத்தைத் தெரிவித்தபோது, திருத்தந்தையின் கருத்துக்கள் சரியான வழியில் அமைந்திருந்தன என்று கூறினார்.Roma என்று அழைக்கப்படும் நாடோடி மக்களின் முன்னேற்றத்திற்குத் திருத்தந்தையுடன் இணைந்து உழைக்க தான் தயாராக இருப்பதாகவும் Rajan Zed எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.