2011-02-16 16:08:51

காதலர் தினத்தையொட்டி, நேபாள கிறிஸ்தவர்கள் ஏழைகளுக்கு உதவிகள்


பிப்.16,2011. இத்திங்களன்று கொண்டாடப்பட்ட வாலன்டைன் நாள், அல்லது காதலர் தினத்தையொட்டி, நேபாள கிறிஸ்தவர்கள் ஏழைகளுக்கு உதவிகள் பல செய்து, விவிலியத்தை வழங்கினர்.
எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல், காத்மண்டு நகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியில் கத்தோலிக்க, மற்றும் பிற கிறிஸ்தவ இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விளையோரின் முயற்சிகளைக் கண்ணுற்ற பல இந்துக்களும் இதைப் பாராட்டினர். வாலன்டைன் நாளன்று கடவுளின் அன்பைப் பறைசாற்றும் வகையில் இவ்விளைஞர்கள் செய்த பணிகள் பாராட்டுக்குரியதென்று புகழ்பெற்ற இந்து பாடகர் Komal Oli கூறினார்.
இந்துக்களின் அரசு என்று விளங்கிய நேபாளத்தில் 2006ம் ஆண்டு முதல் மத சுதந்திரம் மதிக்கப்படுவதால், தற்போது அந்நாட்டில் 1,50,000 கிறிஸ்தவர்களும், 8,000 கத்தோலிக்கர்களும் வாழ்கின்றனர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவில் 1929ம் ஆண்டு காதலர் தினத்தன்று திருமணம் புரிந்து, கடந்த 82 ஆண்டுகளாக பிரியாமல் வாழும் இருவரை அமெரிக்க ஐக்கிய நாடு சிறப்பான வகையில் கௌரவித்தது.New Mexicoவில் வாழும் Marshall Kuykendallம் அவரது மனைவி Winnieம் திருமணம் புரிந்தபோது, தங்களைச் சாவு மட்டுமே பிரிக்கவேண்டும் என்ற உறுதியை கோவிலிலும், நீதி மன்றத்திலும் பதிவு செய்ததாகக் கூறினர்.







All the contents on this site are copyrighted ©.