2011-02-15 14:54:34

முன்னாள் கம்யூனிச நாடுகளின் திருச்சபைக்கென நிதியுதவி.


பிப் 15, 2011. அமெரிக்க ஐக்கிய நாட்டின் அனைத்துக் கோவில்களிலும் திருநீற்றுப் புதனான மார்ச் ஒன்பதாம் தேதியன்று காணிக்கை பிரிக்கப்பட்டு, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள முன்னாள் கம்யூனிச நாடுகளின் கத்தோலிக்கர்களுக்கு உதவும் நோக்கில் அனுப்பி வைக்கப்படும் என அறிவித்துள்ளது அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருச்சபை.

முன்னாள் கம்யூனிச நாடுகளின் வறுமை நிலைகள் இன்னும் தொடர்கின்றன என்பதைக் குறித்த விழிப்புணர்வை வழங்குவதாய் இந்நிதி திரட்டல் இருக்கும் என அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

முன்னாள் கம்யூனிச நாடுகளில் திருச்சபையின் உள்கட்டுமான அமைப்புகளைச் சரி செய்யவும், திருச்சபைப் பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்கவும் என நிதி உதவிகளை வழங்கி வரும் அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருச்சபை, கடந்த ஆண்டு 112 மாணவர்களின் கல்விக்கென உதவித்தொகைகளை வழங்கியதுடன், 21 நாடுகளின் 314 திட்டங்களுக்கென 63 இலட்சம் டாலர்களையும் அளித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.