2011-02-15 15:43:20

பிப்ரவரி 16, வாழந்தவர் வழியில்...


Richard, Maurice என்ற இரு சகோதரர்கள் அமெரிக்காவில் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்தவர்கள். இவர்களில் Richard 1909ம் ஆண்டு பிப்ரவரி 16ம் நாள் பிறந்தவர். இரு சகோதரர்களும் பிறந்த ஊரை விட்டு, கலிபோர்னியா பகுதிக்கு ஒரு கனவை மட்டும் சுமந்து சென்றனர். 50 வயதாவதற்குள் எப்பாடுபட்டாகிலும் கோடீஸ்வரர்களாகிவிட வேண்டும் என்பதே அக்கனவு. அவர்கள் கலிபோர்னியாவுக்குச் சென்றபோது, Richardக்கு 11 வயது. அண்ணன் Mauriceக்கு 18 வயது.
கலிபோர்னியாவில் San Bernardino நகரில் தள்ளு வண்டி உணவகம் போன்ற ஒரு சிறிய உணவகத்தை ஆரம்பித்தனர். அலுவலகப் பணியாளர்கள் மதிய உணவு இடைவேளையில் வந்து விரைவில் உணவருந்திவிட்டுச் செல்லும் வகையில் துரித உணவு வகைகளைத் தயாரித்து அளித்தனர்.
இவர்கள் ஆரம்பித்த அந்த உணவகத்திற்கு McDonald என்ற தங்கள் குடும்பப் பெயரையே வைத்தனர்.... ஆம், இன்று உலகெங்கும் துரித உணவுக்கென உலகப் புகழ்பெற்றதாய் விளங்கும் McDonald’s உணவு நிறுவனத்தை Ray Kroc என்பவர் உதவியுடன் ஆரம்பித்தவர்கள் Richard McDonald, Maurice McDonald என்ற இரு சகோதரர்கள். இன்று உலகின் 118 நாடுகளில் 32000க்கும் அதிகமான உணவகங்களுடன் இயங்கி வரும் ஒரு மாபெரும் உலக நிறுவனம் McDonald’s. இதன் ஓராண்டுக்கான விற்பனை மட்டும் 3300 கோடி டாலர்கள். McDonald’s போன்ற துரித உணவகங்களால் உடல் நலத்திற்கு ஆபத்து என்று சொல்லி வந்தாலும், இவ்வுணவகங்கள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.







All the contents on this site are copyrighted ©.