2011-02-14 15:57:41

கேரளாவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாநாட்டில் 2 லட்சம் கிறிஸ்தவர்கள் பங்கேற்பு


பிப்.14,2011. கேரளாவில் இஞ்ஞாயிறன்று மார் தோமா நற்செய்திக் குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாநாட்டில் 2 லட்சம் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர் என்று UCAN செய்தியொன்று கூறுகிறது.

இஞ்ஞாயிறு முதல் பிப்ரவரி 20 வரை நடைபெறும் இம்மாநாட்டில் 30 இலட்சம் மக்கள் கலந்து கொள்வர் என்ற தன் எதிர்பார்ப்பைக் கூறினார் இந்நற்செய்திக் குழுவின் செயலர் C K Mathew.

116 ஆண்டுகளுக்கு முன் பம்பை ஆற்றங்கரையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி, ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படுவதாகவும், இந்த ஆண்டு நடத்தப்படும் மாநாட்டில் "நீ எங்கே? உன் சகோதரன் எங்கே?" என்பது மையக் கருத்தாக உள்ளது என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இவ்வாண்டு நடத்தப்படும் மாநாட்டில் பெண்களுக்கென ஒரு சிறப்பு கூட்டம் நடைபெறும் என்றும், இம்மாநாட்டில் சமுதாயத்தின் பல்வேறு தீமைகளை ஒழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் செயலர் C K Mathew மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.