2011-02-14 15:54:17

எகிப்து நாட்டின் கத்தோலிக்கர்களும் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்பில் முழு மனதுடன் ஈடுபட வேண்டும் - வத்திக்கான் அதிகாரி


பிப்.14,2011. எகிப்தின் எதிர்காலம் அந்நாட்டு மக்களின் கைகளில் உள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

18 நாட்களாக எகிப்து மக்கள் தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக, அந்நாட்டு அரசுத் தலைவராக இருந்த ஹோஸ்னி முபாரக் பதவி துறந்தபின், அந்நாட்டு மக்கள் சரியானதோர் எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பில் உள்ளனர் என்று எகிப்துக்கான திருப்பீடத்தின் தூதர் பேராயர் Michael Louis Fitzgerald கூறினார்.

பிப்ரவரி மாதம் முதல் ஞாயிறன்று மூவேளை செப உரையின்போது எகிப்து மக்களுக்கென்று திருத்தந்தை சிறப்பாக வேண்டிக்கொண்டதை நினைவு கூர்ந்த பேராயர் Fitzgerald, ஒவ்வொரு மனிதக்குழுவும் தலைமை அதிகாரம் ஒன்றைப் பெற்றிருப்பது தேவை என்றும், அத்தலைமைப் பொறுப்பு மக்களின் நன்மைக்கென அமையும் ஒரு பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

எகிப்து நாட்டின் கத்தோலிக்கர்களும் அந்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்பில் முழு மனதுடன் ஈடுபட வேண்டும் என்று எகிப்துக்கான திருப்பீடத்தின் தூதர் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.