2011-02-12 15:42:41

கொலம்பிய ஆயர்கள் : அமைதிப் பேச்சுவார்த்தையில் இடைநிலை வகிக்கத் திருச்சபை தயார்


பிப்.12,2011. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கும் FARC என்ற கொலம்பிய புரட்சிப் படைக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் நல்லெண்ணத்துடன் இடம் பெறத் தொடங்கியவுடன் தலத்திருச்சபை நடுநிலையாளராகச் செயல்படும் என்று அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் ரூபன் சலசார் கோமெஸ் அறிவித்தார்.

திருச்சபையின் சமூகக் கோட்பாட்டு அடிப்படையில் வழிமுறைகளைக் கொடுத்து உதவுவதற்குத் தலத்திருச்சபை என்றும் தயாராக இருப்பதாக ஆயர் சலசார் கோமெஸ் மேலும் அறிவித்தார்.

கொலம்பியாவில் ஆயுதம் தாங்கிய மோதல்கள் மட்டுமல்ல, வறுமை, செல்வம், நிலம் பகிரப்படல் போன்ற சமூக மோதல்களும் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்றும் ஆயர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.