2011-02-12 15:41:32

எகிப்தின் விடியல், அரபு நாடுகளில் அச்சம்


பிப்.12,2011. அரபு நாடுகள் எகிப்து நாட்டின் தற்போதைய நிலைமையை வரவேற்றுள்ள போதிலும் சீனா உட்பட பல அரபு நாடுகளில் எகிப்தின் தாக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

மேலும், வட ஆப்ரிக்க நாடான அல்ஜீரியத் தலைநகர் அல்ஜியர்ஸில் அரசின் தடையையும் மீறி இச்சனிக்கிழமை காலை நூற்றுக்கணக்கான மக்கள் சனநாயக ஆதரவு போராட்டங்களை மேற்கொண்டனர். அல்ஜீரியாவில் 1992ம் ஆண்டிலிருந்து அமலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின்படி பொதுவான ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

எனினும், அந்நாட்டின் அரசுத்தலைவர் Abdelaziz Bouteflika வைக் குறிக்கும் விதமாக, சுமார் 200 போராட்டதாரர்கள்கூடி "Bouteflika !" வெளியேறுக என்ற கோஷங்களை எழுப்பினர்.

அல்ஜீரியாவில் பாதுகாப்புப் படைகளுக்கும் இசுலாமியப் புரட்சியாளருக்கும் இடையே ஏறக்குறைய 20 ஆண்டுகளாக அவ்வப்போது இடம் பெறும் மோதல்களில் 2,50,000 பேர் இறந்துள்ளனர். இந்நாட்டினரும் அதிக சுதந்திரம் மற்றும் நல்லதொரு வாழ்க்கைத்தரத்திற்காக ஏங்கி வருகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.