2011-02-12 15:29:50

உலக அளவில் குருக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, வத்திக்கான் அறிக்கை


பிப்.12,2011. மேலும், உலக அளவில் குருக்களின் எண்ணிக்கை 1999ம் ஆண்டில் இருந்ததைவிட 2009ம் ஆண்டில் 5,000த்துக்கும் அதிகமாக இருந்தது என்று திருச்சபையின் அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

உலகில் 2009ம் ஆண்டில் குருக்களின் எண்ணிக்கை 4,10,593 ஆக இருந்தது என்றும் இவ்வெண்ணிக்கை 1999ம் ஆண்டில் 4,05,009 ஆக இருந்தது என்றும் அப்புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் காலக் கட்டத்தில் மறைமாவட்ட குருக்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கு மேல் அதிகரித்ததாகவும் துறவற சபைகளைச் சார்ந்த குருக்களின் எண்ணிக்கை சுமார் 5,000 மாகக் குறைந்தது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா, ஐரோப்பா, ஓசியானியா ஆகிய பகுதிகளில் மறைமாவட்ட மற்றும் துறவற சபைக் குருக்களின் எண்ணிக்கை குறைந்ததாகவும் ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் இவ்வெண்ணிக்கை முப்பது விழுக்காட்டுக்கு மேலாக அதிகரித்ததாகவும் வத்திக்கான் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.