2011-02-11 16:16:57

எண்பது வயதாகும் வத்திக்கான் வானொலி புதிய ஊடகத்துறையில்......


பிப்.11,2011. வத்திக்கான் வானொலியின் எண்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிருபர் கூட்டத்தில் வத்திக்கான் நாட்டுச் செயலகத்தின் சார்பில் பேசிய பேரருட்திரு பீட்டர் வெல்ஸ், ஏற்கனவே 45 மொழிகளில் ஒலிபரப்பை நடத்தி வரும் வத்திக்கான் வானொலி வருங்காலத்தில் புதிய ஊடகத்துறையில் நுழையும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார்.

திருச்சபை உள்ளார்ந்த புதுப்பித்தலுக்கானத் திறமையைக் கொண்டிருக்கவில்லை என்று குறை சொல்லுவோரின் குரலுக்குப் போட்டியாக வத்திக்கான் வானொலி தொடர்ந்து செயல்பட வேண்டும் எனறார் பேரருட்திரு வெல்ஸ்.

வத்திக்கான் வானொலி இத்தகைய குரலாக இருந்து வெற்றி பெற வேண்டுமானால், அதற்குப் புதிய ஊடகங்கள் இன்றியமையாதவை என்றுரைத்த அவர், 21ம் நூற்றாண்டில் நற்செய்தி அறிவிப்புக்கு. வாய்ப்புக்களாக வழங்கப்படும் iPad, Facebook, Twitter போன்ற புதிய ஊடகங்களை ஒலிபரப்பாளர் பயன்படுத்த வேண்டும் என்றார்.

திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர், 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி வத்திக்கான் வானொலி தொடங்கி வைத்துப் பேசிய போது பயன்படுத்திய ஒலிதாங்கி, பல்வேறு திருத்தந்தையர் புதிய ஒலிபரப்பிகளைத் தொடங்கி வைத்த போது எடுத்த புகைப்படங்கள் எனப் பல பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

வத்திக்கான் வானொலி, இரண்டாம் உலகப் போரின் போது 2,50,000 செய்திகளைக் கைதிகளின் குடும்பத்தினரிடமிருந்து கைதிகளுக்குத் தெரிவித்தது. கொசோவோப் போரின் போதும் போரில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தியது







All the contents on this site are copyrighted ©.