2011-02-11 16:25:24

ஆப்ரிக்காவுக்கு அர்த்தமுள்ள வளர்ச்சியைக் கொண்டுவரும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு கர்தினால் வலியுறுத்தல்


பிப்.11,2011. ஆப்ரிக்கக் கண்டத்திற்கு அர்த்தமுள்ள வளர்ச்சியைக் கொண்டு வரும் மற்றும் பொது மக்களின் நல்வாழ்வுக்காக உழைக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு அக்கண்டத்தின் கர்தினால் ஒருவர் கேட்டுக் கொண்டார்.

இந்த 2011ம் ஆண்டில் 25 ஆப்ரிக்க நாடுகளில் நகராட்சி, சட்டமன்ற மற்றும் அரசுத்தலைவர்க்கானத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு பேட்டியளித்த ஜாம்பிய நாட்டு லுசாகா கர்தினால் Medardo Mazombwe, வெறுமனே நாட்டை நிர்வாகம் செய்யும் தலைவர்களை மட்டும் தேர்ந்தெடுக்காமல், பொது மக்களின் நலனுக்காகச் சேவை செய்யும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு வலியுறுத்தினார்.

நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறும் தேர்தல் முடிவுகளை ஆப்ரிக்கத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கர்தினால் கேட்டுக் கொண்டார்.

ஜாம்பியா, பெனின், புர்க்கினா ஃபாசோ, காமரூன், கேப்வெர்தே, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, சாட், காங்கோ சனநாயகக் குடியரசு, திஜிபவுத்தி, கபோன், காம்பியா, லைபீரியா, மடகாஸ்கர், மௌரித்தானியா, மொரீஷியஸ், நைஜர், நைஜீரியா, ருவாண்டா, நைஜர், நைஜீரியா, சா தோம் – பிரின்ச்சிப்பே, ஷேய்ச்ஷெல்ஸ், தென்னாப்ரிக்கா, டுனிசியா, உகாண்டா, ஜிம்பாபுவே ஆகிய ஆப்ரிக்க நாடுகளில் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன







All the contents on this site are copyrighted ©.