2011-02-10 16:11:31

கருத்தடைக்கு எதிராக பிலிப்பின்ஸ் ஆயர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்புக்கு அமெரிக்க ஆயர்களின் ஆதரவு


பிப்.10,2011. மக்கள்பேறு குறித்து பிலிப்பின்ஸ் அரசு தற்போது விவாதித்து வரும் பிரச்சனைக்குரிய ஒரு சட்ட வரைவினை எதிர்த்து பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை கூறி வரும் எதிர்ப்புக்கு, அமெரிக்க ஆயர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

கருத்தடைக்கு எதிராக பிலிப்பின்ஸ் ஆயர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்புக்குத் தங்கள் முழு ஆதரவு உண்டு என்று சிகாகோ பேராயர் கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ் தனக்கு தொலைபேசி மூலம் செய்தி அனுப்பியதாக பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் குடும்பநலக் குழுவின் தலைவர் பேராயர் Paciano Aniceto, UCAN செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார்.

அழிவு கலாச்சாரத்தை பரப்பி வரும் சட்டப்பூர்வமான கருத்தடைகள், கருக்கலைப்பு ஆகியவைகளுக்கு எதிராக உயிரின் புனிதத்துவத்தை வலியுறுத்தும் தங்கள் போராட்டம் வெற்றி பெறும் என்று பேராயர் உறுதியாகக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.