2011-02-09 15:41:37

மெக்சிகோவில் நிலவி வரும் வன்முறைகள் திருத்தந்தையை அதிகக் கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது - மெக்சிக்கோவுக்கான திருப்பீடத் தூதர்


பிப்.09,2011. மெக்சிகோவில் நிலவி வரும் வன்முறைகள் திருத்தந்தையை அதிகக் கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறதென மெக்சிகோவுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Christophe Pierre கூறினார்.
மெக்சிகோ நாட்டின் Leon நகரில், அந்நாட்டின் பல்வேறு கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களை அண்மையில் சந்தித்த பேராயர் இவ்வாறு கூறினார்.
உலகில் பிரேசிலுக்கு அடுத்தப்படியாக கத்தோலிக்கரைப் பெரும்பான்மையாய்க் கொண்ட நாடு மெக்சிகோ என்று சுட்டிக்காட்டிய பேராயர், அந்நாடு கடவுளைத் தன் பொது வாழ்வில் மையப்படுத்துவதற்குப் பதில், ஒரு ஓரத்தில் வைத்திருப்பதே அந்நாட்டின் முக்கிய பிரச்சனை என்று கூறினார்.
கடவுளை ஓரப்படுத்திய ஒரு நாட்டில் வாழும் இளையோர், தாங்கள் எதற்காக நன்மைகள் செய்யவேண்டும், கொலை போன்ற தீமைகளை விட்டு விலக வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் வாழும் சூழ்நிலை உருவாகிறது என்று கூறினார் பேராயர் Pierre. இளையோரைத் தகுந்த வழிகளில் வளர்ப்பதால் கத்தோலிக்க, கிறிஸ்தவ பல்கலைக் கழகங்கள் நாட்டுக்கு அரியதொரு சேவையைச் செய்ய முடியும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார் மேக்சிகொவுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Christophe Pierre.







All the contents on this site are copyrighted ©.