2011-02-09 15:42:46

பெத்லகேமை ஒரு பாரம்பரிய நினைவுத் தலமாக அறிவிக்க பாலஸ்தீனிய சுற்றுலா அமைச்சர் வேண்டுகோள்


பிப்.09,2011. பாலஸ்தீனப் பகுதியில் உள்ள பெத்லகேமை ஒரு பாரம்பரிய நினைவுத் தலமாக UNESCO அறிவிக்க வேண்டுமென்று பாலஸ்தீனிய சுற்றுலா அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயேசு பிறந்த இடமான பெத்லகேம் ஒரு பாரம்பரிய நினைவுத் தலமாக அறிவிக்கப்பட்டால், அதன் மூலம் பாலஸ்தீனிய நாடும் உலக அரங்கில் அங்கீகாரம் பெறும் வழிகள் உள்ளதென்று பாலஸ்தீனிய சுற்றுலா அமைச்சர் Khulud Daibes கூறினார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே உள்ள உரசல்களால் பெத்லகேம் குறித்த இந்த விண்ணப்பத்தை UNESCO ஏற்றுக் கொள்வது கடினம் என்று செய்திகள் கூறுகின்றன.பெத்லகேமுக்கு அடுத்தபடியாக Hebron, Jericho ஆகிய நகரங்களையும் பாரம்பரிய நினைவுத் தலங்களாக சேர்க்கும் முயற்சிகள் நடைபெறும் என்று தெரிகிறது. பெத்லகேம் குறித்த இந்த விண்ணப்பத்தை கத்தோலிக்கத் தலத் திருச்சபையும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மற்றும் ஆர்மீனிய கிறிஸ்தவ சபைகளும் ஆதரித்துள்ளன.







All the contents on this site are copyrighted ©.