2011-02-07 15:22:42

எகிப்தில் அமைதி நிலவ திருத்தந்தை செபம்


பிப்.07,2011. இன்னும், எகிப்தின் தற்போதைய சூழல்களைக் கவனமாய்ப் பார்த்து வரும்வேளை, அந்நாட்டில் அமைதியும் நல்லிணக்கமும் இடம் பெறத் தான் செபிப்பதாகவும் இம்மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 13வது நாளாக இஞ்ஞாயிறன்றும் போராட்டம் இடம் பெற்றது.
இதற்கிடையே, பொது மக்களின் விண்ணப்பங்கள் குறித்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக, எகிப்தின் உதவித் தலைவர் Omar Suleiman முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார்.இப்போராட்டத்தில் இறந்தவர்கள் நினைவாக Tahrir வளாகத்தில் செபங்களும் நடத்தப்பட்டன.







All the contents on this site are copyrighted ©.