2011-02-07 15:24:11

அயர்லாந்தில் கத்தோலிக்கக் கோவிலுக்குச் சென்ற பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ்


பிப்.07,2011. பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ் அண்மையில் அயர்லாந்தில் உள்ள ஒரு கத்தோலிக்கக் கோவிலுக்குச் சென்றார். கத்தோலிக்கக் கோவிலுக்குச் சென்றுள்ள பிரித்தானிய அரசக் குடும்பத்தின் முதல் உறுப்பினர் இவரே என்று செய்திகள் கூறுகின்றன.
35 இலட்சம் பவுண்ட், அதாவது, ஏறத்தாழ 24 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள Belfast நகரின் புனித Malachy கோவிலுக்கு இளவரசர் சார்ல்ஸ் சென்றபோது, கத்தோலிக்க ஆயர் Noel Treanor அவரை வரவேற்றார். முன்னாள் ஆயர் Patrick Walsh மற்றும் Presbyterian சபையின் மேற்பார்வையாளர் அருள்திரு Martin Grahamம் உடனிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.கிறிஸ்தவ சபைகளுக்கிடையே வளர்ந்துவரும் புரிதலையும், நல்லுறவையும் எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளதென்று வட அயர்லாந்து முதலமைச்சர் Peter Robinson தன் கருத்தை வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.