2011-02-04 17:23:23

குற்றவாளிகளை பிடிப்பதில் இந்தியா முன்னணி: இன்டர்போல் பாராட்டு


பிப்.04,2011. "குற்றவாளிகளைப் பிடிக்க, ரெட் கார்னர் நோட்டீசை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது,'' என, சர்வதேச காவல்துறையின் பொதுச் செயலர் ரொனால்டு கே.நோபிள் கூறியுள்ளார்.

சந்தேகத்திற்குரியவர்களைக் கண்டறியவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் சர்வதேச காவல்துறையின் உதவியை நாடுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

"இன்டர்போல்' என்னும் சர்வதேச காவல்துறை அமைப்பு மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்து, குற்றவாளிகளை எளிதில் கண்டறிகிறது. ரெட் கார்னர் நோட்டீசின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாடுகளில், இந்தியா மிக முக்கியமானது என்றும் நோபிள் கூறினார்.

குற்றவாளிகளை கண்டறியவும், அவர்களைப் பிடித்துக் கொண்டு வரவும், நாடுகளுக்கு இடையே குற்றவாளிகளை பிடித்துத் தருவது தொடர்பான ஒப்பந்தம் இருக்க வேண்டியது அவசியம். சர்வதேச காவல்துறையின்ர் மூலம், ஒரு குற்றவாளி பற்றி ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கும் போது, அந்த குற்றவாளி எளிதில் சுதந்திரமாக நாடுகளுக்கு இடையே உலவிட முடியாது என்றார் அவர்







All the contents on this site are copyrighted ©.