2011-02-02 15:18:38

மியான்மார் புதிய நாடாளுமன்றம் இராணுவத்தின் கைப்பொம்மை - உலகளாவிய கிறிஸ்தவத் தோழமை அமைப்பு


பிப்.02,2011. மியான்மாரில் உருவாகியுள்ள புதிய நாடாளுமன்றம் போலியானது மற்றும் அந்நாட்டில் ஆட்சியைத் தொடரும் இராணுவத்தின் கைப்பொம்மை அமைப்பு என்று குறை கூறியது CSW என்ற உலகளாவிய கிறிஸ்தவத் தோழமை அமைப்பு.

இந்த நாடாளுமன்றம், இராணுவத்தின் அதிகாரத்திற்கு உறுதியளிக்கும் போலியான அரசியல் அமைப்பை அடிப்படையாகக் கொண்ட போலியானத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும் இராணுவம் அதன் குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்கு வழி செய்கிறது என்றும் CSW ன் பெனடிக்ட் ரோஜர்ஸ் கூறினார்.

மியான்மாரின் மனித உரிமைகள் நிலவரம் குறித்துக் கடந்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் முதல் பரிசீலனை நடைபெற்றதையடுத்து இக்கிறிஸ்தவ அமைப்பு அந்நாட்டு இராணுவ அரசை விமர்சித்துள்ளது







All the contents on this site are copyrighted ©.