2011-02-02 15:16:36

இந்தோனேசிய ஆயர் : அரசியல்வாதிகள் சுய ஆதாயங்களுக்காக மத சுதந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள்


பிப்.02,2011. அரசியல்வாதிகள் தங்களது சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தையும் மதக் குழுக்களையும் பயன்படுத்துகிறார்கள் என்று இந்தோனேசிய ஆயர் ஒருவர் குறை கூறினார்.

இந்தோனேசியத் திருச்சபை சமூகநலப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதற்கான காரணம் பற்றி ஆசிய செய்தி நிறுவனத்திடம் விளக்கிய பதாங் (Padang) ஆயர் மார்ட்டினுஸ் டாக்மா சிட்டுமொராங், சமூக நீதிக்குக் குரல் கொடுக்கும் மதத் தலைவர்களின் வேண்டுகோள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்றார்.

அரசியல் அதிகாரிகள், சமய சுதந்திரத்தை வழிபாடுகள் நடத்தவும், தனிப்பட்ட ஒழுக்க வாழ்வுக்குமென வரையறுத்துள்ளனர் என்று கூறிய ஆயர் மார்ட்டினுஸ், உண்மையான சமய சுதந்திரம் என்பது, பொதுவான விவகாரங்களில் சமயத் தலைவர்களின் குரல் கேட்பதற்கு வாய்ப்புகள் அளிக்கப்படுவதாகும் என்றார்.

இந்தோனேசியக் கிறிஸ்தவத் தலைவர்கள், அந்நாட்டு அரசின் மதம் மற்றும் சமூகக் கொள்கைகள் குறித்த நிலைப்பாடு பற்றி அண்மை வாரங்களாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.