2011-01-28 15:59:40

யூத இனப் படுகொலைகள் நாளை நினைவுகூர்ந்தார் கான்டர்பரி பேராயர்


சன.28,2011. இரண்டாம் உலகப் போரின் போது நடத்தப்பட்ட யூத இனப் படுகொலைகள் குறித்து மனித சமுதாயம் மீண்டும் மீண்டும் பேசாமல் இருந்தால் அச்சமயத்தில் துன்பப்பட்டவர்கள் பற்றிய நினைவையே வருங்காலத் தலைமுறை இழந்து விடும் என்று இங்கிலாந்து ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபைத் தலைவர் கூறினார்.

சனவரி 27ம் தேதி, இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்ட யூத இனப் படுகொலை நாளுக்கெனச் செய்தி வெளியிட்ட பேராயர் ரோவன் வில்லியம்ஸ், அந்தச் சகாப்தத்தில் பரிட்டனில் வாழ்ந்த யூதர்கள் எதிர்நோக்கிய வெளிப்படையாய்ச் சொல்லாமல் விடப்பட்ட சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.

மேலும், இந்நாளில் பேசிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், இத்தகைய கொடுஞ்செயல்கள் வரலாற்றில் மீண்டும் இடம்பெறக் கூடாது என்றார்.

இரண்டாம் உலகப் போரின் போது நாத்சி வதைப்போர் முகாம்களில் சுமார் அறுபது இலட்சம் யூதர்களும் இன்னும் பெருமளவில் பிற மக்களும் கொல்லப்பட்டனர்







All the contents on this site are copyrighted ©.