2011-01-26 15:30:09

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன - கர்தினால் ஆஞ்ஜெலோ பஞாஸ்கோ


சன.26, 2011. கிறிஸ்தவர்களுக்கு எதிராக நாளுக்கு நாள் அதிகமாகி வரும் வன்முறைகள் ஒரு இன அல்லது மத அழிவை உறுதிசெய்யும் முயற்சியாகத் தோன்றுகிறதென்று கர்தினால் ஆஞ்ஜெலோ பஞாஸ்கோ கூறினார்.
இவ்வியாழன் வரை நடைபெறும் இத்தாலிய ஆயர் பேரவையின் நிரந்தர குழுவினர் கூட்டத்தை இத்திங்களன்று ஆரம்பித்து வைத்த இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் பஞாஸ்கோ இவ்வாறு கூறினார்.
புத்தாண்டு நாளன்று எகிப்தின் அலெக்சான்றியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு உட்பட பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக் காட்டிப் பேசிய கர்தினால் பஞாஸ்கோ, உலகில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பல வன்முறைத் தாக்குதல்களுக்குக் கிறிஸ்தவக் குழுக்களே பெரிதும் இலக்காகி உள்ளன என்று கூறினார்.கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், இந்தியா, சுடான், நைஜீரியா என்ற நாடுகளில் கிறிஸ்தவர்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட வன்முறைகள், ஈராக், எகிப்து ஆகிய நாடுகளில் இன்னும் உச்ச நிலையை அடைந்துள்ளன என்று கர்தினால் தன் கவலையை வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.