2011-01-26 15:29:27

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் இறுதியில் வழங்கப்பட்ட திருத்தந்தையின் மறையுரை


சன.26, 2011. இயேசு இறுதி உணவின் போது வேண்டிக்கொண்ட ஒற்றுமையிலிருந்து இன்றைய கிறிஸ்தவ உலகம் வெகு தூரத்தில் இருந்தாலும், இந்நிலை குறித்து மனம் தளர்வது தூய ஆவியார்மீது நாம் காட்டும் நம்பிக்கையின்மையே என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புனித பவுல் மனமாற்ற விழாவான இச்செவ்வாய் மாலை கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வாக, ரோமையில் உள்ள புனித பவுல் பசிலிக்காவில் நடைபெற்ற மாலை வழிபாட்டில் மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கி பல சிறந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி பேசியத் திருத்தந்தை, இந்த முயற்சிகளுக்காக விசுவாசிகள் அனைவரும் இறைவனுக்கு நன்றிசெலுத்த வேண்டியது கடமை என்றும் கூறினார்.கிறிஸ்து விரும்பிய ஒன்றிப்பு என்பது, பல்வேறு கிறிஸ்துவ சபைகளின் அமைப்புமுறை மாற்றங்களில் மட்டும் அடங்கியதில்லை என்றும், அந்த ஒன்றிப்பு சிறப்பாக நமது விசுவாசக் கோட்பாடுகளிலும், வழிபாட்டிலும் நாம் காட்டும் ஒன்றிப்பை நோக்கியே இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.