2011-01-26 15:32:08

"உணவுப் புரட்சி தேவை" பிரித்தானிய அறிவியலாளரின் கூற்று


சன.26,2011. உலகின் பட்டினி அபாயத்தைப் போக்க புரட்சிகர மாற்றங்கள் தேவை என உணவு உற்பத்தி குறித்து ஆராய பிரித்தானிய அரசால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு ஒன்று கூறியுள்ளது.
மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உலக மக்கள் அனைவருக்கும் உணவளிக்க வேண்டுமானால், அடுத்த நாற்பது ஆண்டுகளில் உலகின் உணவு உற்பத்தி இரட்டிப்பாக வேண்டும் என்று 35 நாடுகளைச் சேர்ந்த 400 அறிவியலாளர்களைக் கொண்ட இக்குழு கூறியுள்ளது.
உற்பத்தி செய்யப்படும் உணவில் கணிசமான பகுதி வீணடிக்கப்படுவதாக இந்த அறிக்கை கூறியுள்ளது. மரபணு மாற்றங்கள் செய்து உணவு உற்பத்தியைப் பெருக்க முயல்வதை விட உணவு வீணாவதைத் தடுக்க கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.