2011-01-25 15:13:34

இந்தியாவில் ஆண்டுக்கு 7 இலட்சம் பெண் சிசுக் கொலை


சன.25,2011. இந்தியா முழுவதும் ஆண்டு தோறும் 7 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவதாக தேசிய மனித உரிமை அவை உறுப்பினர் சத்தியபிரதா பால் தெரிவித்துள்ளார்.

பெண் சிசுக் கொலையைத் தடுக்க அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு, கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என்பதை அறியத் தடை விதித்துள்ள போதிலும், இதையும் மீறி ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ளும் பெற்றோர், அது பெண் குழந்தையாக இருந்தால் கருவிலேயே அழித்து விடும் கொடுமை இன்னும் நடக்கிறது என்ற சத்தியபிரதா பால், இந்தியாவில் ஆண்டுதோறும் 7 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளதை சுட்டிக் காட்டினார்.

பாலினப் பாகுபாடு காரணமாக இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு வயது முடிவதற்கு முன்பே 17 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றன என்றும் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இன்னும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்படாதது வெட்கக்கேடு என்றும் சத்தியபிரதா பால் மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.