2011-01-24 15:03:36

சனவரி 24 வாழ்ந்தவர் வழியில்……


சி.பி.முத்தம்மா (Chonira Belliappa Muthamma, சனவரி 24, 1924 - அக்டோபர் 14, 2009)

Chonira Belliappa Muthamma சி.பி.முத்தம்மா இந்தியக் குடியுரிமைப் பணித் தேர்வில் வெற்றியடைந்த முதல் பெண். இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949 இல் பணியில் சேர்ந்தவர். பாலினப் பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திப் பெண்ணுரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர். சென்னைக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர். இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளுக்கு எதிராக இருந்த விதிகளை மாற்றப் பாடுபட்டவர். ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்துகொண்டிருந்த வெளியுறவுத்துறையில் பணிபுரிய விரும்பி அரசுபணித் தேர்வாணையம் நடத்திய தேர்வில் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று இந்திய வெளியுறவுத் துறை பணியில் சேர்ந்தார் முத்தம்மா. வெளியுறவுத் துறையில் பணிபுரியும் அளவு கடந்த ஆர்வத்தோடு பணியில் சேர்ந்த முத்தம்மா ஒவ்வொரு கட்டத்திலும் பலவிதமான பாலியல் பாகுபாடுகளுக்கும் ஆளாக நேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையில் 1924ம் ஆண்டு சனவரி 24ம் தேதி பிறந்தார் சி.பி.முத்தம்மா. இவர் தனது 85 வது வயதில் 2009ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.